Thursday, October 17, 2013

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?

 

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), 
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?
 என்பது பற்றி தெரிந்து கொள்ள இதற்கு முந்தய பதிவை படிக்கவும்..


1
பதிவு முறை:

• இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும்.

• ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல்" என்ற தலைப்பில் கீழ் ஒரு புதிய பயனர் New Register என "பதிவு" மிகையிணைப்பை கிளிக் செய்க.கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்.

• பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

• வெற்றிகரமாக உங்களை பதிவு செய்த பிறகு, ஒரு "நன்றி" செய்தி பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம் ஒரு இணைப்பை பதிவு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id) அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை செயல்படுத்துவதற்கு) 

• உங்கள் மின்னஞ்சல் ஐடி அனுப்பப்படும் என்று இணைப்பை கிளிக் செய்து உறுதி படுத்த வேண்டும். (இணைப்பு 7நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.)

• உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது என்று உறுதி அளிக்கும். 

 

2பாஸ்போர்ட் Account Login:

• நான் இப்போது "உள்நுழைவு" மிகையிணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பயனர்பெயர் கொடுத்து உள்நுழையும்.

• உங்கள் கடவுச்சொல் கொடுங்கள்.

• உங்கள் திரையில் காட்டப்படும் தட்டச்சு எழுத்துகளை கொடுத்து கிளிக் செய்யவும்.

 

3பாஸ்போர்ட் விண்ணப்பம் (Passport Application):

உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். 

இரண்டாவதை "Apply for Fresh Passport / Reissue of Passport" கிளிக் செய்யவும்

அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து Print செய்துபூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம். அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.

அடுத்து வரும் புதிய பகுதியில்

முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தட்கல் முறையில் வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.அதன்பின் மற்றொரு பகுதி வரும்.

அதில் உள்ள உங்களது அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் "அடுத்து" என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை முடிவடையாத விட்டு & அடுத்த நாள் அதை பூர்த்தி தொடர விரும்பினால் "என் விவரங்கள் சேமி" கிளிக் செய்து, நீங்கள் கடைசியாக பூர்த்தி செய்த பக்கத்தை "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால் அது வரை நீங்கள் அடுத்த / முந்தைய பக்கம் இடையே செல்லவும் & உங்கள் விவரங்கள் திருத்த முடியும். கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் நீங்கள் எதையும் மாற்ற முடியாது.

• Given Name : உங்களது பெயர்
 Surname:
உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
• Previous Name :
உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
• Sex:
ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
• Date of Birth:
பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
• Place of Birth:
பிறந்த ஊர்
 District or Country:
நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
• Qualification:
உங்களது படிப்பு (SSLC pass  என்றால் NOC அப்ளை செய்யலாம்)
• Profession:
தொழில்
• Present Address:
தற்போதைய முகவரி
• Permanent Address:
நிரந்தர முகவரி
• Please give the Date since residing at the Present Address:
எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
• Phone No:
தொலைபேசி எண்
• Email Address:
இமெயில் முகவரி
• Marital Status:
திருமணமான தகவல்
• Spouse's Name:
கணவர்/மனைவியின் பெயர்
• Father's Name:
தந்தை பெயர்
• Mother's Name:
தாயார் பெயர்
 
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
• Voter ID, Athaar Card No, PAN Card Number
இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
• Is applicant eligible for Non-ECR category? SSLC Pass
செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.

 

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Button கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஓன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரியும், தொலைபேசி எண்ணும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் போலிஸ் வெரிபிகேஷன் அதான் முக்கியம். 

 

5பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport):

பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும். அதனையும் "Save" செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்

1)நியமனம் பக்கம் 5minutes தான் திறந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும்.

2)அதே நாளில் இரண்டாவது முயற்சித்து கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும்.

3)அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload/Refresh பட்டனை அழுத்தாதிர்கள்.

 

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.

அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு Receipt தருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை

(குறிப்பு நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவணகளிலும் ஒரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்)

 

6பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application Status Online):

நீங்கள் PSK-ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு கோப்பு எண் பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து "ட்ராக்" பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

7போலீஸ் சரிபார்ப்பு (Police Verification):

சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO- Village Asministrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்துவருகிரீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள்.

 

8Passport Dispatch:

அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு எஸ்எம்எஸ் பெறுவீர்கள் மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் பாஸ்போர்ட் எண் தேதி குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடி ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி & தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வந்துவிடும். 

அவ்வளவுதான் முடிந்தது நண்பர்களே...இனி நீங்களும் அப்ளை செய்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்..

 

 

 

No comments:

Post a Comment